Tuesday, July 26, 2011

காதலர்களே !



பிறக்க
நிற்
நடக்க
கற்க
வளர்க்க
மணக்க,
அனைத்துக்கும்
பெற்றோர் தேவை, 
காதலிக்க???? – 
பாவம் பெற்றோர்கள்!!

Monday, July 25, 2011


அடியே அழகி….
தங்கம் வைரம் உன்னிடம் இல்லை
தரிசு நிலம் கைவசம் இல்லை, ஆனால்
என் உயிர் என்னிடம் இல்லை,
என்ன செய்தாய் என்னை?
மறக்க நினைக்கிறேன் உன்னை,
மாயக்காரியா, நீ கண்கட்டு வித்தைக்காரியா!!


சிரிப்பில் உன் முகம் மலரக் கண்டேன் தோழி….
கண்கள் நம்மை ஏமாற்றுவதுண்டு!
என் கண்களும் விதி விலக்கல்ல – 
உணர்ந்தேன், நீ சிரிப்பது உனக்காக அல்ல – 
ஊருக்காக என்று!! பாவம் கண்களில் தவறில்லை –
புரிந்துக்கொள்ள நீயும் பக்கத்தில் இல்லை!
பிரிதல் காதலில் மட்டும் இல்லை, நட்பிலும் உண்டு – 
உணர்ந்தேன் உன் பிரிவைக் கண்டு!!!